Ticker

6/recent/ticker-posts

Kamal hassan Birthday today


இன்று உலகநாயகன் கமல் ஹாசனின் 60வது பிறந்த நாள்.. !!
இந்திய சினிமா வரலாற்றில் கமல்ஹாசன் என்ற ஒரு நடிகருக்கு தவிர்க்க முடியாத இடம் ஒன்று உள்ளது. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்துக்கு எடுத்து சென்றதில், சென்றுகொண்டு இருபதில் கமல் மாதிரி ஒரு கலைஞனை இது வரை நான் கண்டது இல்லை.
கமல் செய்யாத சாதனைகளே கிடையாது. சில சாதனைகள் இதோ:
• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார். விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.
• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.
• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.
• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.
• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.
• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.தான் சினிமாவில் சம்பாத்திதை சினிமாவிலே முதலீடு செய்யும் ஒரு சிலரில் கமலும் ஒருவர்.
• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.
• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.
• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.
• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
இந்த சாதனை நாயகனின் பிறந்த நாள் இன்று..வாழ்த்துவோம்.

Post a Comment

0 Comments