Ticker

6/recent/ticker-posts

Vetrivel movie review in tamil

வெற்றிவேல் விமர்சனம்
வித்தியாசமான கதை இல்லை , தனக்கு எது ஒத்து வருமோ அதை தேர்ந்து எடுத்து நடித்து இருக்கிறார் சசி குமார் , இதுவரை தனது படங்களில் நண்பர்கள் காதலுக்கு உதவி பண்ணிய சசிகுமார் , இதில் தன் தம்பியின் காதலுக்கு உதவுவதால் , தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை கிராம பின்னணியில் காமெடி , குடும்ப பாசம், சண்டை, காதல் என்று கலந்து கொடுத்து இருக்கிறார் .
கிராமத்து கதை என்றால் சொல்ல தேவை இல்லை , கிராமத்து நாயகனாகவே வலம் வருகிறார் சசி குமார் , இன்னும் நடனத்திற்க்கு மட்டும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாம் .
மியா ஜார்ஜ் சில காட்சிகளே வந்தாலும் மனதை கவர்கிறார் , புது முகங்களான வர்ஷா , நிகிலா தங்களது முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்க்கு சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
ஒத்தாசை எனும் பெயரில் வரும் தம்பி ராமையா, தான் வரும் காட்சிகள் எல்லாவற்றிலும் சிரிப்பு சரவெடி கொளுத்தி போடுகிறார் .
பாசமுள்ள தந்தையாகவும் , ஊரில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் முதல் ஆளாக தட்டிக்கேட்கும் தலைவராகவும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் பிரபு .
இமான் இசையில் அடியே மற்றும் " உன்ன போல" இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை ஓகே .
படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தஞ்சை அழகையும், வயல்வெளிகளின் பசுமையையும் அழகாக படமாக்கியிருக்கிறது.
வழக்கமான காதல் , பழிவாங்கல் , குடும்ப சண்டை கதை தான் என்றாலும் அதனை கிராமத்து பின்னணியில் அழகாக கொடுக்க நினைத்து இருக்கும் புதுமுக இயக்குனர் வசந்த மணி , அதில் வெற்றி பெற்று இருக்கிறார் .
வெற்றி வேல் : (3/5)

Post a Comment

0 Comments