Ticker

6/recent/ticker-posts

Vikram Vedha Movie Review

விக்ரம் வேதா விமர்சனம் :
நல்லவன் யார் , கெட்டவன் யார் என்று அறிய ஒரு கேங் ஸ்டருக்கும் - போலிஸ் அதிகாரிக்கும், அவர்களை சுற்றி உள்ளவர் களுடன் நடக்கும் ஆட்டம் தான் இந்த விக்ரம் வேதா..!

விக்ரமாக மாதவன் - ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக காமெடி, கோபம், சென்டிமென்ட் என்று தனது இயல்பான நடிப்பில் அசத்தியுள்ளார்..
வேதாவாக விஜய் சேதுபதி - அறிமுக காட்சியில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி, படம் முழுக்க இன்னும் என்ன வேணும் என்று.. ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பு பிரமிப்பு..!

விக்ரமும் - வேதாவும் சந்திக்கும் காட்சிகள் அப்லாஸ், ஒவ்வொரு முறையும் விக்ரம் முன் ஒரு கேள்வியை வைத்துவிட்டு வேதா காணாமல் போவதும், அதற்கான பதிலை கண்டுபிடித்து வழக்கின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க விக்ரம் முற்படுவதும் என படம் முழுக்கவே விக்ரமுக்கும் வேதாவுக்கும் இடையே நடக்கும் ஆட்டம் மிக சுவாரஸ்யம்.

மேலும் கதிர், வரலட்சுமி, ஷர்தா மற்ற துணை நடிகர்களும் படத்தின் தங்களது கதா பாத்திரத்துடன் பொருந்தி போகிறார்கள்..
படத்தின் பெரும் பலம் சாம்ஸ் பின்னணி இசை, பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் வசனம்.

மொத்தத்தில் இந்த வருடத்தில் ஒரு நல்ல ஆக்ஷன் கிரைம் திரில்லர் படத்தை கொடுத்ததில் இயக்குனர்கள் புஷ்கர் & காயத்ரி இக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தலாம். 💐

விக்ரம் வேதா - மாஸ் 👌👌👌👌 4/5

Post a Comment

0 Comments