Ticker

6/recent/ticker-posts

96 Movie Review Tamil

96 பட விமர்சனம் :

1996 வருடம் 10ம் வகுப்பு படித்த ஜானு ( திரிஷா) - ராம் ( விஜய் சேதுபதி ) மற்றும் அவர்களின் நண்பர்கள் 22 வருடம் கழித்து மீண்டும் சந்திக்கும் ஓர் நாளில் ஏற்படும் நிகழ்வு தான் இந்த படத்தின் க(வி)தை.

விஜய் சேதுபதி ( ராம்) கதா பாத்திரத்தில் - கண்களால், உடல் மொழியால், அழுகையால் நகைச்சுவையால் வசீகர நடிப்பில் உருக்குகிறார். திரிஷா ( ஜானு ) முன் வெட்கப்படும் காட்சியாகட்டும், தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் காட்சியாகட்டும், நண்பர்களுடன் கலகலப்பான காட்சியாகட்டும் நடிப்பால் கவர்கிறார்.

திரிஷா ( ஜானு) கதா பாத்திரத்தில் இவரை விட்டால் யாரும் யோசித்துப் பார்க்கக் முடியாத அளவிற்கு அளவான, அழகான நடிப்பில் அசத்தியுள்ளார்.

திரிஷா - விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே ஓர் இரவில் நடக்கும் பழைய நினைவு, வெட்கம், கண்ணீர், பாசம் , கலகலப்பு , பட படப்பு - நமக்குள் அதிர்வை ஏற்படுத்தும்.

சிறு வயது ராம் - ஜானு மற்றும் அவர்களது நண்பர்களாக நடித்தவர்கள் பள்ளி பருவத்தை கண் முன்னே கொண்டு வந்துள்ளனர். அனைவரும் சிறப்பான தேர்வு.

தற்போதய ராம் - ஜானு நண்பர்கள் ( திவ்ய தர்ஷினி, பக்ஸ், ஆடுகளம் முருக தாஸ் மற்றும் பலர்) , பள்ளி வாட்ச் மேனாக வரும் ஜனகராஜ் , சலூன் கடைக்காரர் என்று சின்னச் சின்ன கதா பாத்திரத்திரங்கள் தங்களது நடிப்பில் நிறைவாக செய்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் படத்திற்கு பெரிய பலம், திரிஷாவுக்கு சின்மையின் வசீகர பின்னணி குரல், கீதா கோவிந்த் இசை, தெளிவான , விரச மில்லாத காட்சிகளோடு கூடிய பிரேம் குமாரின் இயக்கம் மற்றும் மகேந்திரன் ஜெயராஜ் & N.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு - படத்திற்கு ஓர் அழகியலை கொடுத்துள்ளது.

அந்தக் கால (80&90) பள்ளிப் பருவ சொல்லக் காதல், இளைய ராஜா மற்றும் ஜானகி குரல் பாடல்கள், மாசில்லா ஆண் - பெண் நட்பு, நமக்கு பிடித்தவர்களிடம் காட்ட தெரியாத அன்பு , மற்றும் பிரிந்து / கடந்து சென்றவர்களின் தேடல் என்று பலவற்றை இன்று புரட்டி பார்க்கும் (நினைவலைகள் ) அழகான கவிதை புத்தகம் தான் இந்த 96.

மொத்தத்தில் 96 நினைவலைகளின் அழகிய தேடல் 👌👌👌

Post a Comment

0 Comments