Ticker

6/recent/ticker-posts

Pariyerum Perumal Review | Tamil

பரியேறும் பெருமாள் விமர்சனம் :

தென் மாவட்டங்களில் இருக்கும் சாதி பாகுபாடுகள் பற்றி மேலோட்டமாக காண்பிக்க பட்ட படங்கள் இருந்தாலும் இந்த
பரியேறும் பெருமாள் போல ஆழமாக பேசியது இல்லை என்று கூறாலாம் .

இதுவரை திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்டம் பற்றி தெரிந்த அல்லது வந்த படங்களில் அடிதடி , வன்முறை, அருவா வீச்சு , சாதி பெருமை என்பதே கேள்வி பட்டிருப்போம் மற்றும் பார்த்திருப்போம்.

அதையும் தாண்டி அம் மாவட்டங்களின் வேறு ஒரு கோணத்தை, எளிய மக்களின் வாழ்வியலை , அவர்களை சுற்றியுள்ள சாதிய பார்வையை , ஆண் - பெண் உறவை, சாதி பார்த்து பழகாத நட்பை அழகியலோடும் , வலியோடும் கடத்தி இருக்கிறார் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ். 👍

கதையின் நாயகன் - நாயகிகளாக மின்னியுள்ளனர் கதிர் மற்றும் ஆனந்தி. நகைச்சுவையுடன் நின்றுவிடாமல் , குணச்சித்திர நடிப்பில் நல்ல நண்பனாக உறுதுணையாய் இருக்கிறார் யோகி பாபு.

மேலும் படத்தில் நாயகனின் அப்பா பாத்திரப் படைப்பு இதுவரை கண்டிராரது , கண்ணீர் துளிகள் வராமல் இருக்காது அந்த கதா பாத்திரத்தை பார்த்து.

படத்தின் வில்லனாக வரும் 60 வயது மேற்பட்ட கதா பாத்திரம், கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் , நாயகியின் அப்பா போன்ற கதா பாத்திரங்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் கருப்பி, எங்கும் புகழ் துவங்க ( கேட்கும் போது மகிழ்ச்சியான பாடல் - ஆனால் கண்ணீர் துளி வரும் பார்க்கும் போது) படத்திற்கு பலம் மற்றும் படத்தின் அடி நாதம் .

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கிராமப்புற மக்களின் வாழ்வியலை அருமையாக படம் பிடித்துள்ளது.

இப்படியொரு படத்தை எடுத்த மாரி செல்வராஜ் மற்றும் தயாரித்த பா. ரஞ்சித் க்கும் மிகப் பெரிய பாராட்டுகள்.

மொத்தத்தில் இந்த பரியேறும் பெருமாள் எல்லோரும் சாதி, மதங்களை கடந்து மனிதர்களாக வாழ வேண்டும் என்ற உணர்வை தூண்டும்.

அனைவரும் பார்த்து , கொண்டாடப்பட வேண்டிய படம் 

Post a Comment

0 Comments