Ticker

6/recent/ticker-posts

Nerkonda Paarvai Movie Review Tamil

நேர் கொண்ட பார்வை விமர்சனம் :



ஹிந்தியில் ஏற்கனவே அமிதாப்பச்சன் , டாப்ஸி மற்றும் பலர் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கே இந்த நே.கொ. பா.

மூன்று பெண்கள் - ஆண் நண்பர்களுடன் பழகும் போது ஏற்படும் சில செயல்கள் அதனால் அந்த பெண்கள் மீது மட்டும் கூறப்படும் அவதூறு, இவற்றால் அவர்கள் எப்படி மனதளவில் , உடலவில் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை கூறுவதே இந்த நே கொ பா.

அஜித் - நிச்சயமாக பாராட்டப் பட வேண்டியவர் , தனது மாஸ் பிம்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு இந்த மாதிரியான கதையில் அதுவும் ரீமேக்கில் நடித்து இருப்பது சிறப்பு. பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக வாதாடும் வக்கீலாக அமைதியான மற்றும் கோபப் பட வேண்டிய இடத்தில் ஆக்ரோசமான வசனம் மற்றும் உடல் மொழியில் அசத்தியுள்ளார்.

சாரதா ஸ்ரீ நாத், அபிராமி மற்றும் அந்த மேகாலயா பெண் கதாபாத்திரங்கள் தங்கள் மன அழுத்தம், சமூகத்தில் தங்களை பார்க்கும் பார்வை, போராட்ட குணம், மீண்டு வர துடிக்கும் முயற்சி என தங்களது அளப்பரிய பங்கால் நடிப்பில் கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

ரங்கராஜ பாண்டே அஜித்தின் எதிர் தரப்பு வழக்கறிஞர் கதா பாத்திரத்தில் கொஞ்சம் நாடக தன்மை தெரிந்தாலும் தனது முதல் படத்தில் தன்னால் முடிந்த உழைப்பை கொடுத்துள்ளார்.

யுவன் இசையில் பாடல்கள் கை கொடுக்க வில்லை என்றாலும் இடைவேளைக்கு முன் வரும் சண்டை காட்சியில் தன் பின்னணி இசையில் முத்திரை பதிக்கிறார்.

முதல் பாதி மிக மெதுவாகவும் , இது அஜித் படம் தானா என்று ரசிகர்கள் குழம்பும் வேளையில், வரும் இந்த சண்டைக் காட்சி மாஸ் மற்றும் அதகளம்...ஆனால் இந்த சண்டைக் காட்சி கதைக்கு தேவையில்லாத ஆணி தான். அஜித் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக வைக்கப் பட்டுள்ளது.

இதையும் வித்யா பாலன் வரும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தாத பிளாஷ்பேக் காட்சிகளையும் தவிர்த்தால் இப்படம் இக்கால ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த பாடம். !

( இயக்குனர் வினோத் மற்றும் டீமிற்கு வாழ்த்துக்கள் ஒரு ரீமேக் கதையை சிறப்பான மேக்கிங் மற்றும் வசனங்களால் சொல்ல வந்த கருத்தை பொட்டில் அறைந்தால் போல் சொல்லியிருப்பதற்கு 👌

இயக்குனர் வினோத் - சதுரங்க வேட்டை , தீரன் அதிகாரம் ஒன்று போல அடுத்ததாக அஜித் 60 வது படத்தை தன் கதையில் இயக்கவிருக்கும் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது இந்த நேர் கொண்ட பார்வை. )


Post a Comment

0 Comments