Ticker

6/recent/ticker-posts

Magamuni Movie Review

மகாமுனி விமர்சனம் : Magamuni Review

கதை :

மகா & முனி என்ற இரட்டையர்களின் வாழ்வியலை வழக்கமான சினிமாவாக அல்லாமல் வித்தியாசமான திரைக்கதையால்  விவரிப்பதே இந்த மகா முனி .

ஆர்யா : மகா வாக கொலை கும்பலுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுப்பதில் வல்லவராகவும், முனியாக  டியூஷன் ஆசிரியர் மற்றும் யோகாவுடன் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பவராகவும் இரு வேறு  கதா பாத்திரத்தில் கதைக்கு உயிரோடட்டம்  கொடுத்துள்ளார் . ஆர்யாவின் நடிப்பில் இப்படம் ஓர் சிறந்த இடம் பிடிக்கும்.

இந்துஜா : மகா வின் மனைவியாக, தனது கணவருக்கு பக்க பலமாக இருப்பதும், அவர்   சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது தவிப்பதும் என  நடிப்பில் சிறப்பான பங்காற்றியுள்ளார். இறுதியில்  அவர் எடுக்கும் விபரீதமான முடிவு கலங்க செய்கிறது .

மஹிமா நம்பியார் : முனி கதா பாத்திரத்திற்கு துணையாக  துள்ளலான , தைரியமான நடிப்பில் மிளிர்கிறார் .

மற்ற சின்ன சின்ன கதா பாத்திரங்களும்  கதைக்கு சரியான தேர்வுகள் .

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு மற்றும் தமனின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம் .

ஒவ்வொருக்கும் சமூகத்தின் மீது இருக்கும் பார்வை - பணம் , அரசியல் , அதிகாரம், வறுமை , ஏக்கம் , அன்பு , ஆன்மிகம் என எல்லாவற்றையும் இரட்டையர்கள் மகா & முனி கதா பாத்திரத்தில் பொருத்தி விளக்கும் விதத்தில் அட போட வைக்கிறார் இயக்குனர் சாந்த குமார் .

குறிப்பாக சாதி மற்றும் ஆன்மிகம் பற்றி முனி விளக்கும் காட்சி , மகா கத்தி குத்துடன் மருத்துவமனை செல்லுவது , அரசியல் மற்றும் அதிகாரம் ஓர் இயலாதவன் மீது எப்படி இருக்கிறது என்பதை காட்சிப் படுத்திய விதத்திலும் - வசனங்களிலும் அருமையாக கையாண்டு இருக்கிறார் .

குறைகள் : மிகவும் மெதுவாக நகரும் முதல் பாதி , கொலை கும்பலுக்கே ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் மகா , தன்னை கொல்ல நடக்கும் சதியை புரியாமல் இருப்பது ,மஹிமா நம்பியார் கதா பாத்திரம் பாதியில் விட்டு சென்று  வலுவாக படைக்கப்படாதது .

மொத்தத்தில் இந்த மகா முனி : எல்லோரும் விரும்பி பார்க்கும் படமாக அமைவது சந்தேகம் தான் ஏனென்றால் பார்ப்பதற்கு பொறுமை மற்றும் புரிதல் அவசியம் ,  வழக்கமான கதை போல் இல்லாமல்  புதுமையை விரும்புவர்களுக்கு இந்த  மகா முனி ஓர் பேரனுபவம் .

மகாமுனி : இயக்குனர் சாந்த குமார் & ஆர்யாவின் பிசிறில்லாத ஸ்கெட்ச் (4/5)

Post a Comment

0 Comments