Ticker

6/recent/ticker-posts

Karthi Thambi Movie Review

தம்பி விமர்சனம் :

கதை :

சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறிய மகனை தேடும் சத்யராஜ் - சீதா தம்பதி மற்றும் அவனது அக்கா ஜோதிகா, 15 வருடங்களுக்கு பிறகு கோவாவில் இருப்பதாக போலீஸ் மூலம் அறிந்து மகனை (கார்த்தி) வீட்டிற்கு கூட்டி வருகிறார் சத்ய ராஜ் , அவன் மீது அக்காவிற்கு கோபம் இருக்கிறது, மேலும் சிலருக்கு அவன்
உண்மையில் சத்யராஜ் மகன் தானா என்ற சந்தேகம் வருகிறது, இதற்கிடையில் கார்த்தியை கொல்ல சில பேர் முயற்சிக்கிறார்கள் , அவர்கள் யார் ? கார்த்தி உணமையில் யார் ? அக்காவிற்கு தம்பி மீது பாசம் வந்ததா ? 15 வயதில் அவன் ஏன் வீட்டை விட்டு ஓடினான் ? என எல்லாவற்றிக்கும் ஓர் சஸ்பென்ஸ் வைத்து நகர்த்தி விடையளிப்பதே இந்த தம்பி !

நடிகர்களின் பங்களிப்பு:

கார்த்தி - சரவணனாக முதல் பாதியில் கோவாவில் ஏமாற்றி பிழைப்பு பவராகவும், சத்யராஜ் குடும்பத்தில் இணைந்த பின்பு காமெடி, பாசம் என்றும் இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கு விடை தேடும் அதிரடி நாயகனாகவும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

ஜோதிகா தம்பியிடம் கோபப்படுவதிலும் , பாசத்தை வெளிப்படுத்தும் இடத்திலும் மிளிர்கிறார்.

சத்யராஜ் தனக்கே உரித்தான இயல்பான நடிப்பில் கவர்கிறார்.

மற்றவர்களில் பாட்டியாக வரும் சௌகார் ஜானகி , போலீஸ்சாக இளவரசு, நண்பனாக பாலா மற்றும் அன்சன் பவுல், நிகிலா விமல் எல்லோரும் சரியான தேர்வு.

மாஸ்டர் அஸ்வந்த் வரும் காட்சிகள் காமெடி அதகளம்.

தொழில் நுட்ப பங்களிப்பு :

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் கவனிக்க தவறினாலும் பின்னணி இசை மற்றும் ஆர்.டி. ராஜ சேகர் ஒளிப்பதிவில் கோவா , மேட் டுப்பாளைய அழகையும் , த்ரில்லர் காட்சிகளின் திக் திக் உணர்வையும் நமக்குள் கடத்துகிறது.

கதை இடை வேளைக்கு முன்பு இருந்து தான் த்ரில்லர் அனுபவத்திற்கு செல்கிறது.

முதல் பாதி மித வேகம் மற்றும் பாடல்கள் படத்திற்கு வேகத்தடை.. மேலும் பாப நாசம் படத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஏற்படுத்திய பரபரப்பு மற்றும் தாக்கம் இதில் குறைவு .

மொத்தத்தில் இந்த தம்பி முதல் பாதியை கொஞ்சம் பொறுத்துக் கொண்டால் இரண்டாம் பாதி குடும்பத்துடன் பார்க்க கூடிய திக் திக் திரில்லர் (3/5) .

Post a Comment

0 Comments