Ticker

6/recent/ticker-posts

Sivakarthikeyan Maaveeran Movie Review

 சிவகார்த்திகேயனின் மாவீரன் விமர்சனம் :


கதை :

எந்த பிரச்சனைக்கும் செல்லாமல் ஒதுங்கி, அடித்தாலும் வாங்கி கொண்டு , தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழும் கதாநாயகன், தனக்கு கிடைக்கும் வினோதமான சக்தியால் , மக்களின் ஓர் பிரச்சனைக்கு முன் வந்து,  அரசியல்வாதியை எதிர்த்து, அதனை எப்படி சரி செய்து  மாவீரன் ஆகிறான் என்பதே இந்த படத்தின் கதை .

சிவகார்த்திகேயன் : 

இந்த படத்தில் காதாநாயகனாக அல்லாமல் , கதையின் நாயகனாக சிவககார்திகேயன் சாதாரண குடும்பத்து இளைஞராக தனது இயலாமையை வெளிப்படுத்தும் இடத்திலும், கிடைத்த வினோத சக்தியால் துன்புறுவதும் , பின் அதன் காரணத்தை அறிந்து உருகுவதும், பிரச்சனையை தீர்க்க போராடுவதில் இயல்பாகவும் , சண்டை காட்சிகளில் அதிரடியாகவும்  , யோகிபாபுவுடன் நகைச்சுவை காட்சிகளில் குறும்புடன் நடிப்பில் மிளிர்கிறார். 

யோகி பாபு : 

நாயகனுக்கு அடுத்து பேட்ச் ஒர்க் தொழிலாளியாக வரும் யோகிபாபு , அவர் அடிக்கும் ஒன் லைன் கமெண்டுகளும், சில இடங்களில் பேசாமல் முக பாவனையாலும்  நகைச்சுவையில் ரசிகர்களை கவர்கிறார் .

அதிதி சங்கர் : 

 ஓர் பாடலிலும் , கதாநாயகன் மற்றும் அவரது குடும்பத்திற்கு உதவுவது என பல  தமிழ் சினிமாவில்  பார்த்து பழக்கப்பட்ட  வழக்கமான  காதாநாயகியாக வந்து போகிறார் .

மற்ற நடிகர்கள் : 

விஜய் சேதுபதி திரையில் வரமால் இருந்தாலும் , பின்னணியில் வரும் அவரது குரல் வந்ததும் படம் வேகமெடுக்கிறது , அவரது குரல் வராமல் இருக்கும் இரண்டாம் பகுதியில் கொஞ்சம் தொய்வாகவே இருந்தது , அந்தளவிற்கு படத்தின் ஓட்டத்திற்கு தனது குரலால் ஓர் சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார் .

நாயகனின் தாயாக சரிதா , அரசியல்வாதி வில்லனாக மிஷ்கின் மற்றும் அவரது உதவியாளராக வரும் சுனில்  தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

பரத் சங்கரின் இசையில் Scene ah Scene ah மற்றும் வண்ணார பேட்டையில பாடல்களும்  & பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன., மேலும்  விது அய்யண்ணா வின் ஒளிப்பதிவு படத்தின் கதையமைப்புடன் நம்மை நகர்த்தி செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

 இயக்குனர்  : 

முந்தைய மண்டேலா படத்தில் அழுத்தமான கதையமைப்பில் கவர்ந்த மடோன் அஸ்வின், இப்படத்தில் ஓர் பகுதி எளிய மக்கள்  எப்படி அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பேண்டஸி கலந்து தனது சமூக கருத்தினை தெரிவித்துள்ளார் ,

படத்தின் குறைகள் :

முதலில் மெதுவாக தொடங்கி , நகைச்சுவை , பேண்டஸி என வித்தியாசமாய் நகர்ந்து இடைவேளை வரை விறுவிறுப்பாக சென்ற கதை , இரண்டாம் பாதியில் கொஞ்சம் அங்ககே தொய்வுடனும் ,  யூகிக்க கூடிய திருப்பங்களும் , பொருத்தம் இல்லாத / நம்பகத்தன்மை இல்லாத கிளைமாக்ஸ் காட்சியும் கொஞ்சம் சோர்வடைய வைக்கின்றன.

மொத்தத்தில் மாவீரன்  :

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் , நகைச்சுவையுடன் , புதுமையான பேண்டஸி கதையை விரும்புவர்கள் தாராளமாக குடும்பத்துடன் பார்க்கலாம் .


Post a Comment

0 Comments