Ticker

6/recent/ticker-posts

மான் கராத்தே - திரை விமர்சனம்:


கதை :
ஐந்து நண்பர்க, ஒரு சித்தர் கொல்லிமலை சித்தரை சந்திக்க போறாங்க ,சித்தர் மூலமாக, அடுத்து நான்கு மாதங்கள் கழித்து வெளியாகப்போகும் தினத்தந்தி பேப்பர் கிடைக்கிறது.
அந்த பேப்பரில் இந்த ஐந்து பேரும் பீட்டர் என்கின்ற பாக்ஸ்சர் மூலமா இரண்டு கோடி ரூபாய் பரிசு வெல்வார்கள் என்று இருக்கிறது.அந்த ராயபுரம் பீட்டரை(சிவ கார்த்திகேயன்) தேடிப்பிடித்தால்,அவருக்கு பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாதவராக இருக்கிறார். அவரை எப்படி கெஞ்சிக் கூத்தாடி வழிக்குக் கொண்டுவந்து, இரண்டு கோடி ரூபாயை வென்றார்களா? என்பதே ஏ.ஆர்.முருகதாஸின் சுவாரஸ்யமான கதை.
சிவ கார்த்திகேயன்:
டான்ஸ் , நடிப்பு , காமெடி என்று தனக்கு ஏற்ற கதையை தேர்ந்து எடுத்து கலக்கியிருக்கிறார். ஓப்பனிங் சாங்குடன் அறிமுகம் ஆகிறார் சிவ கார்த்திகேயன், பெரிய நடிகர்களுக்கு உள்ள ஓப்பனிங் போல இவருக்கும் விசில் பறக்கிறது திரையரங்குகளில். அவரது கவுண்டர் பஞ்ச் , நக்கல், காமெடி என அனைத்திலும் பொளந்து கட்டி இருக்கிறார் .
சதீஸ்:
சதீஸ் சிவாவை பாக்ஸிங்கில் கலந்துகொள்ள வைக்கவும் ட்ரெய்னிங் எடுக்க வைக்கவும் எடுக்கும் முயற்சிகள் , ஆனால் சிவாவோ என் லவ்வுக்கு ஐடியா கொடு..வீட்டுக்கு வெள்ளை அடிச்சுக்கொடு..ஃப்ரிட்ஜ் வாங்கிக்கொடு’ என்று அவர்களை படுத்தி எடுக்க, படம் முழுக்க செம ரகளையாய் போகிறது.
ஹன்சிகா:
இந்த படத்தில் நடிக்கவும் செய்கிறார் இந்த கொழு கொழு ஹன்சிகா, பாடல், காமெடி காட்சிகளில் சிவா -ஹன்சிகா இடையே நல்ல கெம்ஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி இருக்கிறது .
சூரி பாக்ஸ்ங் நடுவராக கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிப்புக்கு கியாரண்டி
பிளஸ் பாயிண்ட்ஸ் :
சுகுமாரின் ஒளிப்பதிவு,
அனிருத்தின் இசை
படத்தின் பெரிய பலம், படத்தை முழுக்க காமெடியாகவே கொண்டு சென்றிருப்பது
நெகடிவ் பாயிண்ட்ஸ்:
பாக்ஸிங் போட்டிகள் ரொம்ப நேரம் நடப்பது
வில்லன் ஹீரோவை அடித்து நொறுக்கிவிடுவார். பிறகு ஹீரோ செத்துப்போன ஹீரோயின்/தங்கை/பாட்டியை நினைத்து வீறுகொண்டு எழுந்து அடி பிரிப்பார். அதே ஓல்டு டெக்னிக் இங்கேயும்.
மொத்தத்தில் கலகலப்பான ஒரு ஜாலியான படம் , பார்க்கலாம்

Post a Comment

0 Comments