Ticker

6/recent/ticker-posts

Comali Movie Review

கோமாளி விமர்சனம் :

12ஆம் வகுப்பில் படிக்கும் போது விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு செல்லும் ரவி 16 வருடங்களுக்கு பிறகு கண் முழிக்கிறார், அவருக்கு மிகவும் புதுமையாக தெரியும் இப்போதுள்ள மக்கள் வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இவற்றிக்கு ஏற்ப தன்னை மாற்ற முயற்சிக்கும் விதத்தை நகைச்சுவை, சென்டிமென்ட் மற்றும் சமூக கருத்து கலந்து சொல்லியிருப்பதே இந்த கோமாளி.

80/90 கால வாழ்க்கை முறை , மேலும் 16 வருடங்களுக்கு பிறகு சென்னை அடைந்து இருக்கும் மாற்றம் , நாம் என்னென்ன வசதிகள் பெற்றுயிருக்கிறோம் மற்றும் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை விளக்குவதில் & காட்சிபடுத்திய விதத்தில் அருமை.

ஜெயம் ரவி சிறு வயது கதா பாத்திரமாகட்டும் , கோமா நிலையில் இருந்து மீண்டு அடிக்கும் லூட்டிகள் மற்றும் தனது இயலாமையால் ஏற்படும் தங்கையுடன் ஏற்படும் மன வருத்தம் , இறுதியில் சமூக கருத்து என்று அனைத்து எரியாவிலும் செம.

யோகிபாபு படம் முழுவதும் ரவியுடன் சேர்ந்து செய்யும் கலாட்டாகள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அசத்தியுள்ளார்.

காஜல் அகர்வால் படத்தின் பாடல்களுக்கே பயன்பட்டுள்ளார், இன்னொரு நாயகியான சம்யுக்தா நல் வரவு.

கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக தன் பங்கினை சிறப்பாக செய்துள்ளார்.

ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை இளமை துள்ளல்.

இடைவேளை வரை மிகவும் விறுவிறுப்பாக செல்லும் கதை இரண்டாம் பகுதியில் கொஞ்சம் தடுமாகிறது , வலிந்து திணிக்கப்பட்டுள்ள சென்னை வெள்ள காட்சிகள், அடிக்கடி வரும் அட்வைஸ் என படம் எங்கோ செல்கிறது, ஆனால் ஆங்காங்கே வரும் யோகி பாவுவின் நகைச்சுவை இரண்டாம் பாதியை காப்பாற்றுகிறது.

முதல் படத்திலேயே நகைச்சுவை, எமோஷன், சமூக கருத்து என எல்லா எரியாவிலும் புகுந்து விளையாடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் .

மொத்தத்தில் இந்த கோமாளி அனைத்தும் கலந்த காக்டெய்ல் கலவை. Rating (3.5/5)

Comali, Comali Review, Jayam ravi, Yogibabu

Post a Comment

0 Comments